பாதி கதை கேட்டுவிட்டு நடிக்க மறுத்த விஜய்.. பின்னர் சூப்பர்ஹிட் ஆன படம் எது தெரியுமா?

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் “பிகில்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, ஜாக்கி ஷெரிப், கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி ரிலீஸாக உள்ள இப்படத்திலிருந்து “சிங்கப்பெண்ணே” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

பிக்பாஸ் வைல் கார்டு என்ட்ரி குறித்து கஸ்தூரி போட்ட ட்வீட்!

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமியின் சமீபத்திய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. லிங்குசாமி பல வருடங்களுக்கு முன் விஜய்யிடம் ஒரு கதை சொன்னாராம். முதல் பாதி கதையை மட்டும் கேட்டுவிட்டு, போதும் வேண்டாம் என கூறி விஜய் நடிக்க மறுத்து விட்டாராம்.அதன் பிறகு அந்த கதையில் விஷால் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் தான் “சண்டைக்கோழி” என இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.