நான் அப்படி சொல்லவே இல்லை… விஜய் பட இயக்குனர் மறுப்பு

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் “பிகில்”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை உற்று நோக்கி தளபதி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜயை வைத்து திருமலை, ஆதி போன்ற படங்களை இயக்கிய ரமணா மீண்டும் விஜயை வைத்து படம் இயக்குகிறார் என்ற தகவல் சமீபத்தில் தீயாய் பரவியது.

அசினின் மகளை பார்த்திருக்கீங்களா! குட்டி தேவதையின் புகைப்படம் இதோ

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் ரமணா நான் அப்படி ஒரு தகவலை எந்தவொரு பேட்டியிலும் சொல்லவில்லை. அது ஒரு பொய்யான செய்தி என்று தெரிவித்துள்ளார்.