பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பிரபலம்!

விஜய் – அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக தயாராகி வரும் திரைப்படம் “பிகில்” இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெரிப், கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதை முன்னிட்டு சமீபத்தில் வெளியான “சிங்கப்பெண்ணே” என்ற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் பிகில் படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று கசிந்துள்ளது. அது என்னவென்றால் பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் ஒரு பாடலில் நடித்துள்ளதுள்ளாராம். இந்த தகவலை படக்குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.