பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக நடந்த நிகழ்வு!

Bigg Boss Tamil Vote

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி 42 நாட்கள் கடந்து விட்டது. வாரம் ஒரு போட்டியாளர் என இதுவரை பாத்திமா பாபு, வனிதா விஜயக்குமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா என 5 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இதில் நேற்றைய நிகழ்ச்சியில் சாக்ஷி வெளியேற்றப்படுவார், என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரேஷ்மா வெளியேறியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலை நேற்று வெளிய வந்த ரேஷ்மாவிடம் கமல்ஹாசன் நீங்கள் 1 கோடியே 30 லட்சம் ஓட்டு வாங்கியுள்ளீர்கள். ஆனால் ஒருவர் 1 கோடியே 32 லட்சம் ஒட்டுகளை பெற்று உங்களை முந்தி விட்டார்.

இவ்வளவு சின்ன வித்தியாசத்தில் முதன் முறையாக எலிமினேட் ஆனது நீங்கள் தான். இது போன்ற விபத்து தேர்தலிலும் நடப்பது உண்டு என கூறினார். என்னதான் ரேஷ்மாவுக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினாலும் அவர் வெளியேறியதால் பலர் வருத்தத்தில் உள்ளனர்.