கமலின் “இந்தியன் 2” படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் “இந்தியன்”. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில் பிரபல காமெடி நடிகர் விவேக் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பவர் இவரா?

ஒருவேளை இந்த தகவல் உண்மையானால் கமல்ஹாசன் மற்றும் விவேக் இணையும் முதல் படம் இந்தியன் 2 என்பது குறிப்பிடத்தக்கது.