பாதியில் நின்ற சிவகார்த்திகேயன் படத்துடன் இணைந்த பிரபல நிறுவனம் – உற்சாகத்தில் SK ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக ஹீரோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து நீண்ட மாதங்களாக பட்ஜெட் இல்லாமல் பாதியிலே நிற்கும் ரவிக்குமார் படத்தை முடித்துவிட சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். சைன்ஸ் பிக்சன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 24AM ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் தற்போது 24 AM ஸ்டூடியோஸ் உடன் KJR ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்.

SK14 குறித்து வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்டினால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்