மெகா ஹிட்டான ரன் படத்தில் முதலில் நடித்த நடிகை இவரா? நீண்ட வருடம் கழித்து வெளியான உண்மை

மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் “ரன்”. இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். மேலும் ரகுவரன், அனு ஹாசன், விவேக், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வித்யா சாகர் இசையமைத்திருந்தார்.

மெகா ஹிட்டான இப்படத்தில் மீரா ஜாஸ்மின் கதாபாத்திரத்தில் முதலில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் கமிட்டாகியுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் அவருக்கு கதையில் சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

சென்னையில் வசூல் வேட்டை நடத்தி வரும் நேர்கொண்ட பார்வை – இத்தனை கோடிகளா?

அதன் பிறகு மீரா ஜாஸ்மின் அந்த ரோலில் நடித்துள்ளார். இந்த தகவலை வித்யா பாலன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.