தளபதி 64ல் நடிக்கிறாரா விஜய் சேதுபதி? உண்மை தகவல் இதோ

தளபதி 64ல் நடிக்கிறாரா விஜய் சேதுபதி? உண்மை தகவல் இதோ

தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள “பிகில்” தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெரிப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

எனக்கு பைனலுக்கு போக விருப்பம் இல்லை! கவினுக்காக அழும் லாஸ்லியா

இப்படத்தை தொடர்ந்து விஜய் மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

ரஜினி, கமலுக்கு அரசியல் வேண்டாம்… முன்னணி நடிகர் வேண்டுகோள்!

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் என்னவென்றால் தளபதி 64 படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3-ம் தேதி சென்னையில் துவக்க உள்ளது. விஜய் சேதுபதி டிசம்பரில் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.