தல அஜித் கூட நடிப்பீர்களா? விஜய் சேதுபதியின் சூப்பர் பதில்

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான சங்கத்தமிழன் படம் படுதோல்வி அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து கடைசி விவசாயி, மாமனிதன், லாபம் போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கிறது. மேலும் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் நீங்கள் அஜித்துடன் நடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி அவர் சான்ஸ் கொடுத்தால் சந்தோஷம் தான், எனக்கு ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. எந்த ரோல் என்றாலும் எனக்கு ஓகே தான். என்று பதில் அளித்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.