
தளபதி விஜய் நடிப்பில் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் 2010ல் வெளியான படம் சுறா. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து தமன்னா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மணி ஷர்மா இசையமைத்திருந்தார்.
விஜய்யின் 50வது படமான இந்த படம் படுதோல்வி அடைந்தது. இன்று வரை விஜய் கேரியரில் மிக மோசமான படமென்றால் சுறா என்று சொல்லிவிடலாம்.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா நீங்கள் ஏன் சுறா படத்தில் நடித்தீர்கள் என்று விஜய்யிடம் கேட்டுள்ளார்.
அதற்கு விஜய் “அதன் ஏன் சார் கேட்கிறீங்க கதை சொல்லும் போது கடலில் குதித்து எழுந்துன்னு சத்தம் போட்டு சொன்னார்கள், நான் கூட பெரிய படம் என்று மிரண்டு போய் நடித்துவிட்டேன்” என வருத்தப்பட்டு கூறினாராம். இந்த தகவலை நடிகர் மனோபாலா தற்போது பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.