தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் படத்தின் டிரைலர் இதோ!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் அசுரன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திலிருந்து ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.